ஹஷிம் ஆம்லா ஓய்வு | ஜனவரி 19, 2023
சர்ரே: தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஹஷிம் ஆம்லா 39. கடந்த 2004ல் கோல்கட்டாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமான இவர், 2019ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றார். ‘டாப்–ஆர்டர்’ பேட்டரான இவர், 124 டெஸ்ட் (9282 ரன், 28 சதம்), 181 ஒருநாள் (8113 ரன், 27 சதம்), 44 சர்வதேச ‘டி–20’ (1277 ரன், 8 அரைசதம்) போட்டிகளில் 18,672 ரன் குவித்துள்ளார். டெஸ்ட் அரங்கில் ‘டிரிபிள் செஞ்சுரி’ (311 ரன், எதிர்: இங்கிலாந்து, 2012) விளாசிய ஒரே தென் ஆப்ரிக்க வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
சர்வதேச ஓய்வுக்கு பின், இங்கிலாந்தில் நடக்கும் ‘கவுன்டி’ போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடினார். கடந்த ஆண்டு இவர் இடம் பெற்றிருந்த சர்ரே அணி கவுன்டி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இந்நிலையில் நேற்று, அனைத்து வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இனி, தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ‘டி–20’ லீக் தொடரில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
இதுகுறித்து ஆம்லா கூறுகையில், ‘‘சர்ரே அணிக்காக ஓவல் மைதானத்தில் விளையாடியதை மறக்க முடியாது. இந்த அணியுடனான பயணம் மிகச் சிறப்பானது,’’ என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
